நிலைத்தன்மை
மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா என்ற திரைப்பட பாடல் போல சென்னையில் உள்ள கிண்டி குதிரை பந்தயத்திற்கு horse race சென்று ஒரு குதிரையின் மீது நம்பிக்கை வைத்து பணம் கட்டிய பின்பு ஏற்படும் மனநிலை என்ன?
இது நிச்சயம் வெற்றி பெறும் என்று முழு மனதோடு நம்பியது போல நடக்கிறார்கள். எதனால்? எல்லாம் ஆழ்மனதின் மேட்டர் என்கிறார்கள் ஆய்வாளர்கள் இது எப்படி சாத்தியம்?
ஒரு நல்ல முடிவு எடுத்து ஒரு செயலை செய்த பின், அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அசிங்கம் என்று முடிவு செய்து, அந்த செயலை கட்டிக்கொண்டு இருக்கிறோம் அல்லவா அதுதான் நிலைத்தன்மை cocsistency.
புரியவில்லையா திருமண முடிவுகள், கல்லூரியை தேர்வு செய்தல், வீடு கட்ட ஒப்பந்தம் செய்தவர்கள் என்று முடிவு எடுத்து அதற்கான செலவுகளை செய்து அதன் போக்கில் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவது நிலை தன்மை.
ஒரு கட்சியினுடைய உறுப்பினர் என்ற முறையில் கற்று என்ன தவறு செய்தாலும் ஆதரித்து தொலைக்காட்சி விவாதங்கள் டீக்கடை பஞ்சு விவாதங்கள் வரை ஆதரித்து தீர வேண்டும் என்று நினைக்கின்றோம். இது சத்தியமாக அரசியல்வாதிகளுக்கு பொருந்தாது. ஏன் அரசியல்வாதிகள் கட்சி மாறுவார்கள் உறுப்பினர்கள் மாறுவதில்லை என்று சொன்னார் அரசியல் விமர்சகர் சோ.
பொதுவாக மாறிக்கொண்டே இருப்பவர்களை பெற்று வந்து இருக்கிறோம் எனக்கு ஒரு நாக்கு ஒரு சொல் என்கிறோம். விசுவாசாமாக இருக்க விரும்புகிறோம்.
உளவியல் நிபுணர் thomas mariarty என்பவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள கடற்கரையில் ஒரு ஆய்வை மேற்கொண்டார். கடற்கரையில் துணி விரிப்பின் மீது மக்களோடு மக்களாக சூரியக் குளியல் எடுத்தார் தலைக்கு அருகே ஒரு வானொலி பற்றிய வைத்து விட்டு கடல் அருகே சென்று விட்டு வந்தார்.
தனது உதவியாளர்களை வைத்து அந்த வானொலி பற்றிய எடுத்து வரச் சொன்னார் இப்போது பக்கத்தில் இருந்தவர் அதை கண்டுகொள்ளவில்லை இப்படி 20 முறை செய்தார்.
பிறகு பக்கத்தில் படுத்துபவரிடம் வானொலி பெட்டியை radio பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க அவரும் சம்மதித்தார்.
இப்பொழுது
மீண்டும் 20 முறை தனது உதவியாளரை விட்டு வானொலியை எடுத்து வரச் சொன்னார் ஒவ்வொரு முறையும் பக்கத்தில் படுத்து இருந்தவர் தடுத்தார்.
ஏன் இந்த மாற்றம்
சொன்னபடி செய்ய வேண்டும் என்கிற மனிதர்களுடைய நிலை தன்மை தான் காரணம் சொன்னது செய்துவிட்டால் வேலைப்பளு மிச்சம் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என நினைப்பதுதான் காரணம்.
உதாரணமாக
நாம் வாங்கிய பொருட்களில் பெரும்பாலும் ஏற்கனவே வாங்கிய நிறுவனத்தின் பொருட்களையே brand திரும்பத் திரும்ப வாங்குகிறோம் ரொம்ப வருஷமாக வாங்குகிறேன் என பெருமையாக பேசுகிறோம்.
பிராண்டை மாற்றினால் இதுவரை செய்தது தவறு என்பது போல கருதுகிறோம் தயங்குகிறோம். காரணம் மக்களுக்கு நிலைத்தன்மையின் மீது உள்ள நாட்டம்.
இதை வைத்துதான் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளுக்கு முன்னரே சில பொருட்களை விளம்பரப்படுத்துவார்கள். அதுவும் குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருப்பதாக வடிவமைத்து விளம்பரம் செய்வார்கள்.
ஏன்
அதன் மீது தேவையை demand உருவாக்கத்தான். இதை வைத்து ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் அப்பா அம்மாவை தொந்தரவு செய்வார்கள். ஆனால் பண்டிகை வரும்போது அப்பொருள் கிடைக்காது அதற்கு பதிலாக வேறு ஒன்றை வாங்கி தருவார்கள்.
விழாக்காலம் முடிந்ததும் மீண்டும் அப்பொருளை விளம்பரம் செய்கிறார்கள் காரணம் விற்பனையை பெருக்கத்தால் இப்படித்தான் இரு பொம்மைகளை விற்கிறார்கள்.
இது எப்படி சாத்தியம்?
அப்பா சொன்னால் செய்வேன் என்கிற வசனம் தான் இதற்கு காரணம் இந்த உளவியல் ஒத்தியால் வியாபாரம் நடக்கிறது இப்பொழுதெல்லாம் பெரும்பாலான விளம்பரங்கள் குழந்தைகள் வந்து போவது ஏன் என்று புரிகிறதா?
Comments
Post a Comment