Posts

Showing posts from September, 2021

மெத்த வீடு

 ஊரில் ஒரு மெத்தை வீடு இருந்தது. அந்த வீட்டில் மின் இணைப்பு இருந்தது.  அங்கேதான் எல்லோரும் உட்கார்ந்து படிப்போம். அது கங்காணி வீடு என்று எல்லோரும் அழைப்பார்கள். பர்மாவில் சிலர் வேலைபார்த்து வந்தார்கள். அந்த வருமானத்தில் கட்டப்பட்டதுதான் அந்த வீடு.  அப்போது கான்கிரீட் போட்ட வீடாக  இருந்தது.  இரவு நேரங்களில் அங்கேயேதான் படிப்போம்.  குழந்தைகள் எல்லோருக்கும் பொது வீடாக அது இருந்தது. படித்ததும் விளையாடுவோம். அவ்வளவு பெரிய வீடு. மேலே மெத்தையில இசைத்தட்டு இருந்தது.   பழைய எக்கோ  இசைத்தட்டுகள் அங்கு இருக்கும். அந்த வீட்டிலேயே ஒரு அயன்பாக்ஸ் இருந்தது. தேக்கினால் செய்யப்பட்ட பெரிய மேசையும் இருந்தது.