எண்ணமும் செயலும்

 ஆக்கபூர்வமான மனப்பாங்கினை உடையவர்கள் எப்போதும் தீர்வு காண  முடியும் என்ற பக்கமும், எதிர்மறை மனப்பான்மை உடையவர்கள் எப்போதும்  சிக்கலின் பக்கமும் இருக்கிறார்கள்.

 ஏன்?

 நேர்மறை அல்லது ஆக்கபூர்வமான மனப்பான்மை உடையவர்களின் மனநிலை எப்படிப்பட்டது தெரியுமா? கடினமாக இருக்கும் ஆனாலும் முடிக்க முடியும் என்பதே.

 எதிர்மறை மனப்பான்மை உடையவர்களின் மனநிலை அதற்கு மாறாக முடிக்க கூடியது தான் ஆனால் மிகவும் கடினமானது என்பதாக இருக்கிறது என்று டாக்டர் சி எஸ் மிஸ்ரா (Dr. C. S . Mishra ) ஆய்வுகளின் அடிப்படையில்  அடிப்படையில் கருத்து தெரிவித்தார்.

 அமெரிக்க வளர்ந்த நாடு என்பது தெரியும் அங்கே உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

 அது என்ன?

 நீங்கள் சந்திக்கும் மிகக் கடினமான பிரச்சனை என்ன என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. எங்களிடம் சுயநம்பிக்கை போலிய அளவில் இல்லை என்று 75% மாணவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

 அப்படியானால்...

 இந்தியா போன்ற வளமை நாடுகளில் இளைஞர்களின் நிலை என்ன?

 அவ நம்பிக்கையே நமக்கு முன் உள்ள சவால் எதிர்மறையான என்னால் முடியாது அணுகுமுறையிலிருந்து அக்ககப்பூர்வமான அணுகுமுறைக்கு என்னாலும் முடியும் என்ற நம்பிக்கைக்கு மாறுவது அவசியம்.

 எது வெற்றியாக பார்க்கப்படுகிறது

 அதிக பணம், வசதி, புகழ் மரியாதை செல்வாக்கு பெற எது காரணம்? கடின உழைப்போ, அதிர்ஷ்டமோ எதுவாகினும் அந்த வெற்றி எப்படி கிடைக்கிறது?  அல்லது எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

 பணம் வளர்ச்சி செழுமை என்பது வெற்றி அல்ல. பணம் வெற்றியை தீர்மானிக்க கூடிய காரணி அல்ல. வெற்றியால்தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவரவர்களின் துறையில் பெற்ற சாதனைகள் தான் காரணம்.

 சினிமாவில் நடிப்புக்கு அமிதாப், பாட்டு பாடுவதில் லதா மங்கேஷ்கர்  விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்கள்.

 முடிவில்லாத வெற்றியா?

 வெற்றிக்கு ஒருபோதும் முடிவு இல்லை. அது ஒரு தினசரி பழக்கம், தினசரி பயணம். ஒரு குறிப்பிட்ட செயலில் வெற்றி கிடைக்கும் போது உடனே அடுத்த செயலுக்கானா திட்டம் தயாரிக்க ஆரம்பிக்கிறோம்.  எனவே வெற்றிக்கு முடியவில்லை தோல்விக்கு முடிவு உண்டு.

 துணிவோடு கற்பனை செய்க

 வெற்றிக்கு அடிப்படையாக விளங்குவது இடைவிடாத நமது எண்ணங்களும் அதை ஒற்றிய கற்பனைகளும் தான் வெற்றிக்கான விதைகளாக இருக்கின்றன. துணிவோடு கற்பனை செய்யுங்கள் இதை மறக்காமல் தினமும் செய்யுங்கள். தினமும் நீர் ஊற்றி செடி வளர்ப்பது போல தொடர்ந்து உங்களுடைய இலக்கை நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள்.

 என்னால் முடியும், நான் செய்வேன் என்ற எண்ணமும் உங்களுக்குள்ளே இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாள் பூ பூக்கும் அதுபோல வெற்றி கிட்டும்.

 அணுகு முறையில் மாற்றம்

 திறமைகளை விட அணுகுமுறை மிக அவசியம். உங்கள் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றத்தின் மூலமாக எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் மாற்றத்தை காண முடியும்.

 அதிக கோபம், வெறுப்பு, சிடுச்சுடுப்பு, கவுரவம்  இறுமாப்பு போன்ற சிறிய விஷயங்களால் திறமை இருந்தும்  வெற்றி பெற முடியாது.

 இணைந்து பழகுதல், குழுவாக செயல்பட ஒத்துழைத்தல் போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி மற்றும் சாதனைகளுக்கு 85% அணுகுமுறை தான் என்று புகழ்பெற்ற Hardward பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

 வெற்றி தெரியுமா?

 வெற்றி நம் கண்களுக்கு உடனே தெரியாவிட்டாலும் வெற்றிக்கான வளர்ச்சியானது நம்முடைய விளைவுகள் மூலமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் அதுதான் வெற்றியாக மாறும்.

 உதாரணமாக மூங்கில் வளர ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆனால் நான்கு ஆண்டுகள் வரை வளர்ச்சியில் எந்த மாற்றமும் தெரியாது. ஐந்தாவது வருடத்தில் சில நாட்களில் 6 வாரங்களில் கிட்டத்தட்ட 90 அடி வரை வளர்கிறது மூங்கில்.

 தினமும் பொறுமையுடன் நீர் ஊற்றுங்கள். மூங்கில் ஆறு வாரத்தில் மட்டும் வளரவில்லை தொடர்ந்து பொறுமையாக நீர் ஊற்றியதோடு அதற்கான பாதுகாப்பும் கொடுத்து செயல்பட்டாதால்தான் அந்த அசுர வளர்ச்சி கிடைக்கிறது.

 கடினமாக இருக்கலாம் ஆனால் சாத்தியமாகும், முடியும் என்ற மனப்பான்மை மிக அவசியம்.


Comments

Popular posts from this blog

முட்டாள்தனம்

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்