சீட்டு சேமிப்பு
ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு வீட்டில் ஒரு அம்மையார் சேமிப்பு அட்டை தருவார். அதில் முப்பது கட்டங்கள் இருக்கும். ஐந்து பைசா அட்டை ஒன்றை அம்மா வாங்கி தந்தார். தினமும் அந்த அட்டையையும் ஐந்து காசையும் கொடுத்தால் ஒரு கட்டத்தில் முத்திரை குத்தி அம்மையார் தருவார். இப்படி முப்பது கட்டங்கள் முடிந்ததும் மொத்த காசை தருவார்கள் அதை வீட்டில் அம்மாவிடம் கொடுப்பேன். இப்படித்தான் சேமிக்கும் பழக்கம் வளர்ந்தது.