Posts

Showing posts from November, 2022

நேரத்தை சேமிக்க முடியுமா

 பணத்தை சேமிக்க முடியும். அதுபோல நேரத்தையும் சேமிக்க முடியும் எப்பொழுது திட்டமிட்டால் சேமிப்பு என்பது கைகொடும் எப்படி அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும்.  அறிவால் திட்டம் தீட்ட முடியும். திட்டம் நிறைவேற பலவற்றை செய்தாக வேண்டும். முதலில் நேரத்தை ஒதுக்க வேண்டும் தயாரிப்பாளர் முதல் இயக்குனர் நடிகர்கள் அனைவரும் நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.  எல்லோருடைய நேரம் கிடைத்த பின் அல்லது ஒதுக்கப்பட்ட பின் தான் ஒரு திரைப்படம் உண்மையாக அறிவிக்கப்படுகிறது.  அதுபோல நம்முடைய திட்டம் நிறைவேற தினமும் அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும்.  செயல்படுத்தாத வரை அறிவுக்கு மதிப்பு ஏது வேகமாக செயல்பட வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் எல்லாவற்றிற்கும் நம்மிடம் நேரம் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.  உடல் பருமன் குறைக்க வேண்டுமா?  சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா?  உடற்பயிற்சிக்கு நேரம் தினமும் ஒதுக்கினால் தானே சாத்தியம் கடைசி நேரத்தில் ராம ராமன் என்றால் என்ன செய்ய முடியும் பள்ளி மாணவர்கள் முதல் நிறுவன அதிகாரிகள் வரை ஆண்டில் கடைசி மாதங்களில் தான் பரபரப்பாக செயல்படுகிறார்கள்.  ஏன்...

உறுதி மொழி தேவையா

உறுதி மொழிகள் நமது எண்ணங்களை தூண்டக்கூடியது மறு பரிசீலனை செய்யக்கூடியவை.  உறுதிமொழிகள் நமக்கு புதிய பாதைகளை ஏற்படுத்தி தருபவை. உறுதிமொழிகளை நமது வெற்றிக்கு உதவ மாற்றி அமைப்பததே நம்முடைய மகிழ்ச்சியை வசப்படுத்த வழி.  சக்தி வாய்ந்த உறுதிமொழிகளை உருவாக்கி அவற்றை தொடர்ந்து நம் வாழ்வில் நடைபெற படுத்த வேண்டும் இதற்கு நாம் மனதை தயாராக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்.  எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே என்ற திரைப்பாடல் போல ஒரு நாள் ஜெயிப்பேன் என்ற வரிகள் போல நமது உறுதி  மொழிகள் உ த்வேகத்தை  தரக்கூடியவை.  பொறுப்பை ஏற்றுக்கொள்ள ல்  பொறுப்புணர்வோடு செயல்படுவது என்பது பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொள்வது இதுவும் உருது மொழி தான் வரும் பிரச்சினைகளுக்கு நானே பொறுப்பு என்னால் வாழ்க்கைக் கொள்ள முடியும். நான் இப்போது இருக்கிற நிலையில் இருந்து நான் விரும்புகிற நிலைக்கு என்னால் செல்ல முடியும். என்னுடைய சூழ்நிலை மேம்படுத்த முடியும். வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும்.  என்னுடைய எண்ணங்களை மாற்றவும் முடியும் அதன் மூலம் சிறப்பான வெற்றிகளையும் பெற முடியும் போன்ற மன பாவ...

மகிழ்ச்சியை கண்டுபிடித்தல்

 நாம் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அதனால் மகிழ்ச்சிக்கு தடையில்லை. மகிழ்ச்சிக்கான அனைத்து விஷயங்களும் நம் ஊருக்குள்ளேயும் விதைக்கப்பட்டுள்ளது. அதை நாம் அறுவடை செய்தாலே போதும்.  நாம் ஏன் மகிழ்ச்சியை அறுவடை செய்ய வேண்டும்?. அல்லது மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.  நமது வெற்றிகளுக்கான ஆற்றலையும். முத்துவேகத்தையும் கொடுக்கக் கூடியது மகிழ்ச்சி தான். எப்படி?  மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் மற்றவர்களோடு இணைந்து வேலை செய்ய முடியும். மற்றவர்களை நம்மோடு இணைக்க முடியும். தேவையான ஆற்றல் கொடுக்கும் சக்தி மகிழ்ச்சிக்கு உண்டு. தேவையான திறனை மேலும் வெளிப்படுத்த மகிழ்ச்சியால்  முடியும்.  மகிழ்ச்சியாக இருப்பது கற்றுக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம். நெருக்கடியான சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு குழுவிற்கு தலைவராக இருந்தால் இந்த பண்பு மிகவும் அவசியம். மனதை அமைதிப்படுத்தும் கலையும் கூட மகிழ்ச்சிதான். எனவே மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.  நமது வாழ்க்கையில் அளவுகோல் தான் என்ன?. இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட ...