முட்டாள்தனம்

 உண்மையான தகவல்களையும் நேர்மறையான தகவல்களையும் நாம் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பயன்படுத்தினால் தெளிவு நிச்சயம்.

 முடிவுகளால் சில நேரங்களில் வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு முடிந்த வரை வருத்தங்களை குறைப்பது தான் நல்ல முடிவு எடுப்பு உதாரணம் ஆகும்.

 நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு இன்றியமையாத ஒன்று அதிலும் வணிகத்திற்கு அவசியம் நுண்ணறிவு கொண்டு பார்க்கும் பொழுது சில நேரங்களில் நாம் அருகில் இருக்கும் தூரத்திலிருந்து தேடிக்கொள்வது போல் ஆகும்.

 பதிலாக பார்வையின் தூரத்தை குறித்து பொது அறிவு துணை கலைத்தால் நமக்கு கண்ணுக்குத் தெரியாமல் போன பொருளோ மனிதரோ எளிதில் தெரியும் என்கிறார் Elias M. Awad என்கிற வெர்ஜினிய பல்கலைக்கழக பேராசிரியர்.

 முட்டாள்தனமான செயல்கள்

நம்முடைய முட்டாள்தனமான செயல்களை எண்ணிச் சிரித்துக் கொள்கிற சூழ்நிலைகள் எவ்வளவவோ உண்டு.

 முட்டாள்தனத்தை சிந்தனை அற்ற செயல்கள் என்று சொல்வார்கள் அறிவாளிகளும் முட்டாள்களும் மாறவே மாட்டார்கள்.

 மாற்றம் என்று சொல்லலே அவர்களிடம் இருக்காது என்பது கன்பூசியஸ் கருத்தாகும். பெட்ரோல் வரியை குறைத்து விட்டு எரிபொருள் சிக்கனம் தரும் கார்களுக்கு அதிக வரி வசூலிப்பது போல ஆகிவிடும்.

 முடிவுகளும் முட்டாள்தனமும்ந

நுண்ணறிவுக்கு எல்லைகள் உண்டு. ஆனால் முட்டாள் தனத்திற்கு எல்லைகள் இல்லை. முட்டாள்தனம் என்பது ஒரு இனம் புரியாத மனதில் ஏற்படும் உணர்வுகளின் உந்துதலால் சமுதாயத்தை நோக்கி குவிக்கப்படும் ஒரு நிலை.இது தெளிவற்ற உறுதியான  நிலைப்பாடு.

 மிடுக்கான நபர்கள் அடிக்கடி முட்டாள்தனமான செயல்களை செய்வார்கள். ஏனென்றால் தாங்கள் திறமையானவர்கள் என்கிற எண்ணம். பெரும்பாலான முட்டாள்தனமான செயல்களும் முடிவுகளும் தேவைக்கும் குறைவாக தகவல்களின் அடிப்படையில் நிகழ்கின்றன.

 மனமாற்றங்கள் நிகழாத வரையில் பார்வைகள் மாறுவதில்லை. குறைபாடான கண்ணோட்டம் மிகவும் முக்கிய பிரச்சினை ஆகும்.

 முட்டாள்தனமான முடிவுகளை நிறுத்துவது எப்படி?

பெரும்பாலானோர்  ஒரு உணர்வுகளின் அடிப்படையில் தர்க்க சாயம் பூசுவார்கள்.

 நம்முடைய முடிவுகளை நம் எண்ணங்களில் இருந்து விலக்கி வைத்துவிட்டு அந்த இடத்தில் உண்மைக்கும் நேர்மையான தகவல்களுக்கும் இடமளிக்க வேண்டும்.ஏனெனில் அதிகபட்ச வருத்தங்களை குறைப்பது தான் திறமையான நல்ல முடிவு எடுக்க சான்று.

 உதாரணமாக கத்ரீனா என்ற புயல் வந்த பொழுது அது ஒரு சாதாரண காற்றழுத்த தாழ்வு என்று அமெரிக்காவின் அவசரகால மேலாண்மை தலைவர்கள் எழுதினார் ஆனால் தேசிய அளவில் பெரும் பொருள் சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியது.

 எந்த முடிவு எடுக்கும் போதும் தலையாட்டி பொம்மைகளின் ஆதரவு இருந்தால் அந்த மொழி நிச்சயமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

 பேராசிரியர் எலியாஸ் அவர்களின் ஆய்வு முடிவில் ஒரு சிறப்பான கருத்து தெரிவிக்கப்பட்டது. அது என்னவென்றால் சில மனிதர்கள் எதையும் செய்வார்கள் சிந்திப்பதை தவிர. நுண்ணறிவிற்கும் பொது அறிவிற்கும் பெரிய இடைவெளி இருந்தாலும் இரண்டுமே தேவையான ஒன்று என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சங்கீதம் தெரியும் இங்கீதம் தெரியாது என்பது போல இருக்கக் கூடாது இங்கீதமும் அவசியம்.


.






Comments

Popular posts from this blog

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்