மாற்றமே முன்னேற்றம்
உடன் பணி புரிபவர்கள் உங்களுடன் பணி புரிகின்றார்களே தவிர உங்களுக்காக பணி புரியவில்லை என்பதை அடிக்கடி நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். -Jack Foaster.
இன்று நவீன உலகில் நாம் தினமும் புதிய புதிய வசதிகளை பெற முடிகிறது. புதுமை என்பது இப்பொழுதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. எப்போதும் புதிய சோதனைகளும் திட்டங்களையும் முன்னேற வேண்டும் என்ற வண்டிக்கு சக்கரங்கள்.
அப்படியானால் புதிய சிந்தனைகள் நம் மனதிலும் நம்மை சுற்றி இருப்பவர்களை மனதிலும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதற்கான சூழ்நிலைகள் பற்றிய வழிமுறைகள் தெரிய வேண்டும் தானே.
உடன் பணிபுரிவோர்
நீங்கள் எங்கு வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி உங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு கீழ் உள்ள உதவியாளர்கள் யாராக இருந்தாலும் சரி அவர் அவர்கள் தக்கபடி உரிய மரியாதை அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும். அதனால் ஏற்படுகின்ற ஒன்றுபட்ட மகிழ்ச்சியான சூழ்நிலையை புதிய எண்ணங்களை உருவாக்குகிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
ஆகவே,
மற்றவர்களை நம்மோடு நம்மைப் போல ஒரு மனிதர் என்று தான் பார்க்க வேண்டுமே தவிர ஒருபோதும் உயர்த்துவது பார்க்க கூடாது.
நீங்கள் எந்த கண்ணோட்டத்துடன் அவர்களே பார்த்தீர்கள் என்பதை பொறுத்து உங்களுடன் சேர்ந்து செயல்படும் தான் அமைகிறது என்பது உணர்வு உண்மை.
குழுவை நடத்துதல்
தவறு நடந்துவிட்ட பிறகு அதனால் உண்டாகும் பழியை நீங்கள் மற்றவர்கள் மீது திணிக்கும்போது குழுவில் செயலில் வேகம் குறைவதோடு, தோல்வியை நோக்கியே நகரும்.
அதுபோலவே,
சரியாக முடிக்கப்பட்ட பணிக்காக கிடைக்கும் பாராட்டை மற்றவர்களோடு சேர்ந்து கொண்டாடும்போது மற்றவர்களுக்கும் அதில் பங்கு இருந்தது என்பதை எடுத்து சொல்லும்போதே குழுவின் செயல் வேகம் அதிகரிக்கும் அதுவே அடுத்த வெற்றிப் புள்ளி நோக்கி செல்லும் பாராட்டு செயல்படும் போது குழுவை சரியாக வழி நடத்திச் செல்ல முடியும்.
நம்பிக்கை உருவாக்குதல்
வீடு, அலுவலகம் எதுவாக இருந்தாலும் நம் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் போதும் மற்றவை நமக்குச் சரியாக வந்து சேர்ந்து விடும்.
உங்களுடைய சரியான அணுகுமுறையால் மற்றவர்கள் உங்களை முழுமையாக நம்பும்போது, உங்களது அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதரவாதிப்பார்கள்.
உதவுங்கள்
உங்களுடன் பணி பொறுப்பவர்களாக இருந்தாலும் சரி, உங்களுக்கு கீழ் பறிமுதலாக இருந்தாலும் சரி அவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறு சிறு உதவிகளை அவர்களின் செயல் வேகத்தை உருவாக்கும் அதுவே பெரிய வெற்றியாக உங்களுக்கு வந்து சேர்க்கும்.
உதாரணமாக,
மாவீரன் நெப்போலியன் தனது போர் வீரர்களிடம் போரில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக, அவர்களுக்கு பசி எடுக்கும்போது உணவையும் தேவையான பொழுதில் விடுமுறையும் சரியான அங்கீகாரமும், களைப்பு போக ஓய்வும், மழை பெய்தால் கூடாரங்களையும் கொடுப்பாராம்.
அதுபோல உங்களின் பணியாளர்களின் தேவையை கண்டறிந்து அவற்றை அவர்கள் பெறுவதற்கான உதவிகளை நேரடியாகவோ மறைமுகமாக செய்வது அவசியமான ஒன்று இதுவே வெற்றிக்கான செயல்பட அமையும்.
தீர்வுகள் பல விதம்
எந்த வேலையையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பார்ப்பது சிறந்தது. எண்ணித் துணிக கருமம் என்ற திருக்குறள் போல ஒரு பிரச்சனையை முன்வைத்து அதற்கான தீர்வு பணியாளர்களும் கேட்கும் போது அது ஒரே தீர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் பல தீர்வுகள் காண ஊக்கப்படுத்துங்கள்.
பணியாளர்களிடமிருந்து நீங்கள் பெரும் ஒவ்வொரு ஆலோசனையையும் தீர்வுக்காண அங்கீகாரத்தையும், பாராட்டையும் முழுமையாக வழங்குங்கள். மாறுபட்ட தீர்ப்புகள் வாழ்வுகள் உண்டா என்பதை முயற்சி செய்து பார்க்கச் சொல்லுங்கள்.
ஒவ்வொரு முறையும் இப்படிப் பல தீர்வுகளை கொண்டு வந்து இறுதியாக நல்ல தீர்வு வழியை முடிவு கண்டுபிடித்தால் சிறப்பான வெற்றியை பெற முடியும்.
குறுக்கிடாதீர்கள்
ஒரு ஊருக்கு செல்வதற்காக வாடகை கார் ஏற்பாடு செய்வதாக இருந்தால் நீங்கள் போய் சேர வேண்டிய இடத்தை மட்டுமே சொன்னால் போதும். காரை அவர் எப்படி ஓட்ட வேண்டும் என்று சொல்ல மாட்டீர்கள் தானே.
அதுபோலத்தான் பணியாளருக்கான இலக்கினை மட்டும் அவர்களுக்கு கூறுங்கள். அவர்களுடைய வேலையில் குறிப்பிடாதீர்கள். பாதையை அவர்களே தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்.
பணியாளர்கள் மட்டுமல்ல நம்மை சுற்றி இருப்பவர்களிடம் அவர்களுக்கு சுதந்திரமாகவற்றை அளிக்கும் போது மட்டுமே முன்னேற்றத்தை உருவாக்கும் புதிய சிந்தனைகளும் திட்டங்களும் தோன்றுகொண்டே இருக்கும்.
Comments
Post a Comment