சமூகமும் மனித மனமும்

 இப்பொழுதும் கூட சில திரைப்படங்களில் திரையரங்குக்கு சென்று பார்ப்பது ஏன்? காரணம் பலபேர் பார்த்துவிட்டு பிரமாதம் என்று பாராட்டும் போது நாமும் அப்படியே ஒரு தடவை சென்று அப்புறத்தை பார்த்து விடுகிறோம் நம்ம ஊர் பாகுபலி படம் போல. இதில் கவனிக்க வேண்டியது பலபேர் ஒரு செயலை செய்ய முற்படும்போது அது சரியாகத்தான் இருக்கும் என்று நம் நம்பி விடுகிறது.

 ஏன் இப்படி?

 ஒரு செயல் சரியா தவறா என்று தெரியாதபோது அச்செயலை மற்றவர்கள் சரி என்று சொல்வது சரி என்று செயல்படுவதையும் பார்த்து நம்மனமும் சரியாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறது. நம்மூர் வடிவவேல் நகைச்சுவை போல என்றாலும் இது உண்மை எப்படி?

 நாம் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திருத்தி விட்டால் நானும் சேர்ந்து சிரிப்பது இல்லையா நல்ல நகைச்சுவையாக இல்லாவிட்டாலும் கூட.

 இதைத்தான் the principle of social proof என்கிறார்கள். முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்போது மூன்று வயது குழந்தை சில குழந்தைகள் அழுவதை பார்த்து தானம் பேருந்து அழுவதை பார்த்திருக்கிறோம் அல்லவா இன்றைக்கும் கூட அப்படித்தான் நடக்கிறது என்றைக்கும் அப்படித்தான் நடக்கும்.

 இதன் அடிப்படையில் தான்

 விளம்பர படங்களில் சம்பந்தம் இல்லாமல் கூட குழந்தைகளை பயன்படுத்துகிறார்கள் இது மற்ற குழந்தைகள் தொலைக்காட்சியில் பார்த்ததும் சும்மா இருக்குமா?  அம்மாவை ந ச்சரிக்கும்  உடனே அம்மாவும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள்.

 நல்ல விஷயங்களை இல்லையா?

 நாயை கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு என்ன செய்வது நாய்களுடன் கொஞ்சி விளையாடும் குழந்தைகளை காட்டுவதன் மூலம் பயத்தை போக்கிவிட முடியும் என்பதை நிரூபித்தார் என்ற மனத்துவ நிபுணர் பந்திரா என்கிற  மனோதத்துவ நிபுணர் .

 சரிதானே?

 சில இடங்களில் அதாவது பேருந்து நிலையங்களில் பல பேர் ஒரே இடத்தில் சிறுநீர் கழிப்பதும் கூட இப்படித்தான் பொது இடங்களில் நம்மூரில் குறிப்பாக ஆண்கள் இப்படித்தான் செயல்படுகிறார்கள் அப்புறம் அதே போல வீச அளவில் அடிபட்டு கிடப்பதே சுற்றி கூட்டம் சேர்ந்து இருந்தால் நாம் கண்டுகொள்ளாமல் பயணித்துக் கொள்கிறோம் இது எதனால்?.

 காரணம் பலபேர் இருப்பதால் யாரோ ஒருவர் உதவி செய்துவிடுவார் என்று நினைத்து நகர்ந்து விடுகிறோம்.

கூட்டமாக இருக்கும் இடத்தில் உதவி செய்யும் பொறுப்பு அனைவருக்கும் குறைவாக இருக்கிறது என்பது புரிகிறதா?

 ஒரு திரைப்படத்தில் கூட இப்படி ஒரு காட்சி வரும் யாராவது சோடா வாங்கிட்டு வாங்க என்ற வசனம் விளம்பரம் ஆனால் யாரும் போக மாட்டார்கள் பிறகு இது மாதிரி பலபேர் கூட்டம் சேர்ந்த இடத்தில் நடக்கும் விபத்து பல சமயங்களில் அவசர வாபது என்பது ஒரு அவசரம் போல தெரிவதில்லை ஏன்?

 அனைவரும் கவனிக்காமல் போவதால் ஆபத்து ஏதும் இல்லை போல என்றும் நினைத்து விடுகின்றோம் இதே போல தான் பக்கத்து தெருவில் பேரும் சத்தம் கேட்டாலும் பக்கத்துக்கு வீட்டில் அலாரம் இப்படித்தான் கண்டு கொள்வதில்லை.

ஆனால்...

 நாம் தனியாக இருக்கும்போது எதிரே ஒருவர் ஆபத்தில் இருந்தால் நாம் 85 சதவீதம் உதவ தயாராகி விடுகின்றோம். இதே இடத்தில் ஐந்து பேர் கூடிவிட்டால் 31 சதவீதம் மட்டுமே உதவ தயாராக இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏன் இப்படி?

 எல்லாம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் தான் இப்படி செயல்பட வைக்கிறது.

அதாவது பலபேர் செய்தால் அது சரியாக இருக்கும் என்று நம் மனம் நம்புகிறது.




Comments

Popular posts from this blog

முட்டாள்தனம்

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்