நேரத்தை சேமிக்க முடியுமா

 பணத்தை சேமிக்க முடியும். அதுபோல நேரத்தையும் சேமிக்க முடியும் எப்பொழுது திட்டமிட்டால் சேமிப்பு என்பது கைகொடும் எப்படி அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும்.

 அறிவால் திட்டம் தீட்ட முடியும். திட்டம் நிறைவேற பலவற்றை செய்தாக வேண்டும். முதலில் நேரத்தை ஒதுக்க வேண்டும் தயாரிப்பாளர் முதல் இயக்குனர் நடிகர்கள் அனைவரும் நேரத்தை ஒதுக்கியாக வேண்டும்.

 எல்லோருடைய நேரம் கிடைத்த பின் அல்லது ஒதுக்கப்பட்ட பின் தான் ஒரு திரைப்படம் உண்மையாக அறிவிக்கப்படுகிறது.  அதுபோல நம்முடைய திட்டம் நிறைவேற தினமும் அதற்கான நேரம் ஒதுக்க வேண்டும்.

 செயல்படுத்தாத வரை அறிவுக்கு மதிப்பு ஏது வேகமாக செயல்பட வேண்டும் அதற்கு நேரம் வேண்டும் எல்லாவற்றிற்கும் நம்மிடம் நேரம் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.

 உடல் பருமன் குறைக்க வேண்டுமா?

 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா?

 உடற்பயிற்சிக்கு நேரம் தினமும் ஒதுக்கினால் தானே சாத்தியம் கடைசி நேரத்தில் ராம ராமன் என்றால் என்ன செய்ய முடியும் பள்ளி மாணவர்கள் முதல் நிறுவன அதிகாரிகள் வரை ஆண்டில் கடைசி மாதங்களில் தான் பரபரப்பாக செயல்படுகிறார்கள்.

 ஏன்?

 தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஆண்டின் உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் அல்லவா நிதி துறை காப்பீடு திட்டம் கூட இப்படி கடைசி நேரத்தில் கடைசி மாதங்களில் பரபரப்பாய்  பறக்கிறார்கள். பாடாய்ப்படுத்துகிறார்கள்.

இது சரியா?

 தவறு.

 ஒட்டுமொத்த ஆண்டின் இலக்கில் 30 முதல் 40 சதவீதத்தை  பெற முயற்சிக்கிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நேரத்தை சரியாக பயன்படுத்துவது முக்கியம்.

 இலக்கை நோக்கி தினமும் செயல்பட ஒரு வழி உண்டு.அது என்ன? தீர்க்கமான பார்வையே.

இது என்ன செய்ய முடியும் இப்போது இருக்கின்ற செயலாற்றலை விட கூடுதலான ஆற்றலை தரும் மேலும் இடர்பாடுகளையும் மாற்றங்களையும் சமாளிக்க முடியும்.

 அரசியல் தலைவர்களில் சிலர் விஞ்ஞானிகள் நிறுவன தலைவர்கள் தொழில் முனைவோர் மட்டுமல்ல தினசரி செய்தித்தாளை விற்பவர்களும் கூட நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வதால் வெற்றி அடைகிறார்கள்.

 பால் விற்பனை கொரியர் தேவைகள் தபால் சேவைகள் ஆம்புலன் தேவைகள் தீயணைப்பு சேவைகள் பேரிடர் நிவாரண மீட்பு தேவைகள் அவசர சிகிச்சை பிரிவு தேவைகள் என பலவற்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

 சேவை துறைகள் இப்படி நேரத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்போது உற்பத்தி துறைகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு வினாடியும் முக்கியம்.

பூக்கட்டும் மகளிர், ஆடவர் ஒவ்வொரு வினாடிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நேரம் நிறைவே இருக்கிறது.

 இன்னும் சில வருடங்களில் பூமி சுற்றும் தூரம் மாறுவதால் ஒரு நாளைக்கு 25 மணி நேரம் கிடைக்கப் போவதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்.

 திட்டமிடுங்கள் இப்போதே

 இலக்கை அடைவருக்கான பார்வை திட்டமிடல் முக்கியம் திட்டமிடாத எந்த ஒரு செயலும் பயனில்லாதவை. நேரம் சேமிப்பது சக்தியை சேமிப்பதற்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன உங்களுக்கு தெரியாதா என்ன.








Comments

Popular posts from this blog

முட்டாள்தனம்

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்