மகிழ்ச்சியை கண்டுபிடித்தல்
நாம் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அதனால் மகிழ்ச்சிக்கு தடையில்லை. மகிழ்ச்சிக்கான அனைத்து விஷயங்களும் நம் ஊருக்குள்ளேயும் விதைக்கப்பட்டுள்ளது. அதை நாம் அறுவடை செய்தாலே போதும்.
நாம் ஏன் மகிழ்ச்சியை அறுவடை செய்ய வேண்டும்?. அல்லது மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
நமது வெற்றிகளுக்கான ஆற்றலையும். முத்துவேகத்தையும் கொடுக்கக் கூடியது மகிழ்ச்சி தான். எப்படி?
மகிழ்ச்சியாக இருப்பதன் மூலம் மற்றவர்களோடு இணைந்து வேலை செய்ய முடியும். மற்றவர்களை நம்மோடு இணைக்க முடியும். தேவையான ஆற்றல் கொடுக்கும் சக்தி மகிழ்ச்சிக்கு உண்டு. தேவையான திறனை மேலும் வெளிப்படுத்த மகிழ்ச்சியால் முடியும்.
மகிழ்ச்சியாக இருப்பது கற்றுக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம். நெருக்கடியான சூழ்நிலைகளில் அமைதியாக இருந்து தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு குழுவிற்கு தலைவராக இருந்தால் இந்த பண்பு மிகவும் அவசியம். மனதை அமைதிப்படுத்தும் கலையும் கூட மகிழ்ச்சிதான். எனவே மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
நமது வாழ்க்கையில் அளவுகோல் தான் என்ன?. இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளி தான் ஜென் கருத்து.
இங்கு இப்பொழுது என்று கவனத்தை செலுத்த வேண்டும்.
மகிழ்ச்சியும் துயரமும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமானது இருப்பினும் அதில் இருக்கும் மகிழ்ச்சியை மாத்திரம் எப்படி நாம் எடுத்துக் கொள்ள முடியும் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். நமது செயல்கள் தொடர்ந்து நடந்தால் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியும் தொடர்ந்து கிடைக்கும்.
எப்படி?
வேலை விவசாயிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது அரசிடமிருந்து வேண்டிய தங்க காசுகள் கொள்ளலாம் என்று விவசாயி ஒரு காசு மட்டும் எடுத்துக் கொண்டால் சில மணி நேரத்திற்கு மகிழ்ச்சி கை நிறைய எடுத்துக் கொண்டால் சில நாட்களுக்கு மகிழ்ச்சியாக தன் குடும்பத்தோடு உணவு அளித்து இருக்க முடியும்.
கை நிறைய எடுத்துக்கொண்டு சில மாதங்களுக்கு உணவு இருக்கு மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை அப்படியே நிலம் வாங்கி பயிர் செய்ய முயன்றால் வாழ்நாள் முழுக்க உணவுக்கு பஞ்சமில்லை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்த வாய்ப்பை தெரிவித்தால் அவர்களுக்கும் இந்த மகிழ்ச்சியை பெற முடியும்.
நம்மைச் சுற்றிலும் உள்ள மகிழ்ச்சியை நாம் பெற கற்க வேண்டும் நம்மிடம் உள்ள மகிழ்ச்சி பிறருக்கு கொடுக்க வேண்டும்.
மகிழ்ச்சியை கொடுக்க வளரக்கூடியது.
மகிழ்ச்சியை கொடுப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.
Comments
Post a Comment