ஆசைதம்பி

 எங்க ஊர் பாடகர்.

ஆம். திரை இசைப் பாடல்களை அப்படியே பாடி அசத்தும் சூப்பர் சிங்கர்.

அப்போது எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசிய வாசுதேவன் குரல்களில் மிக நன்றாகப் பாடுவார்.

அப்போதைய திருச்சி காவேரி ஸ்டீல் மில்லில் வேலை செய்து வந்தார்.

பணி நேரம் போக ஓய்வில் எப்போதும் இலங்கை வானொலி, திருச்சி வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடல்களை கேட்டு இரசிப்பதும், பாடுவதும் தொடர் கதை.

அவருடன் அவர் நண்பர் வேளாங்கண்ணி சேர்ந்து விட்டால் அந்த இடமே களை கட்டும்.

வானொலி கேட்பதற்குப் பழகினேன்.

பாடல்களை இரசித்தேன்.

செய்திகள் கேட்டேன்.

இளைய பாரதம் கேட்டேன்.

நாடகங்கள் கேட்டேன்.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் வானொலி பட்டிமன்றம் கேட்டேன்.

இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது குரலில் மயங்கினேன்.

அவர் குரலில் மயங்காதார்  யார்?

ஆசை தம்பி மற்றும் குழுவுடன் பாட்டு கச்சேரி கேட்க போவதும் இசை மற்றும் கலைஞர்களை இரசிப்பதும் அப்போதும் எப்போதும் பிடிக்கும்.


Comments

Popular posts from this blog

முட்டாள்தனம்

எண்ணங்களால் உயர முடியுமா

மாற்றமே முன்னேற்றம்