முதலாம் வகுப்பு
பெற்றோர் முதல் சிற்பிகள்
சுற்றத்தார் இரண்டாம் சிற்பிகள்
அவர்களை விட்டுவிட்டு..
அழுகையோடு பள்ளி சென்ற நாட்கள்..
அதட்டலோடு.. அமர வைத்து..
ஆரம்ப பாடம் நடத்திய..
ஆசிரியை
மூன்றாம் சிற்பி.
எங்கள் ஊருக்கும் சிற்பி.
வீடுதோறும் நடந்து வந்து..
பெற்றோர் மற்றோர்களை சந்தித்து..
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முயற்சி செய்து வெற்றி பெற்றவர்.
எனது ஆசிரியர்
எங்கள் ஆசிரியர்.
அன்பாக அழைக்கப்படும்..
மைக்கேல் டீச்சர்.
Comments
Post a Comment