கருணாநிதி

 அரசியல் தலைவர் அல்ல.

பொன்மலை ரயில்வே ஊழியர். அவர் தந்தை ராணுவத்தில் பணி முடித்தவர்.

தினமும் காலை ஆறு முப்பது மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும்.

அதற்கு முன்னதாக சமூக சேவை செய்தவர்.

என்ன?

ஊரில் உள்ள மக்களில் யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டிருந்தால் காலை ஆறு மணிக்கு முன்பாக அவர் வீட்டுக்கு சென்றால் காயத்திற்கு முதலில் சுத்தம் செய்து விட்டு மருந்து இட்டு கட்டு போட்டு விடுவார்.

இது தினசரி வேலை.  இலவசம்.

வருடா வருடம் வரும் பொங்கல் திருநாளில் மூன்று நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடத்துவார். பரிசுகள் தருவார்கள்.

பரிசு ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும். ஒரு விதை ஊன்றும். கிளை பரப்பும்.

பூ பூக்கும். காய் காய்கக்கும்.

பழம் பழுக்கும். விதை மீண்டும் முளைக்கும்.

அதில் ஒரு விதை நான்.

ஏழை மக்கள் வாழும் ஊர். ஊர் குழந்தைகளை அவர் திறன்களை ஊக்குவிக்கும் உன்னத மனிதர்.

எல்லோருடுடனும் இணைந்து பணியாற்றறுவார்.  அவருடன் இணைந்து எல்லோரும் பணி செய்வார்கள்.

எல்லா குடும்பங்களும் அவர் சொல் கேட்பார்கள்.

அவர் இன்று இல்லை. அவர் விட்டு சென்ற பணி தொடர்கிறது.







Comments